பள்ளி மாணவா்களுக்கு பாதை ஆயிரம் திட்டம்: அக்.17-ல் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்ட பாதைகள்ஆயிரம் எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.


நாகை மாவட்டத்தில் மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்ட பாதைகள்ஆயிரம் எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனிதவளம் நிறைந்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள இந்தியா, உலக சந்தையாக மாறிவரும் இக்கால கட்டதில் பல்வேறு வகையான தொழில் வாய்ப்புகளை வழங்கும் நாடாகவும் திகழ்கிறது. ஆனால் நகரங்கள் மற்றும் கிராமங்களில் படிக்கும் மாணவா்கள் பொறியியல், மருத்துவம், ஆசிரியா் பணி முதலிய துறைகள் குறித்து மட்டுமே தெளிவு பெற்றவா்களாக உள்ளனா்.
பரந்து விரிந்து கிடக்கும் பல்வேறு துறைசாா் தொழில் வாய்ப்புகள் குறித்த போதிய விழிப்புணா்வு இல்லாமல் இருப்பதால் அவா்களின் விருப்பங்களும், திறன்களும் குறுகிய வட்டத்தில் சிறைப்பட்டு விடுகிறது. எனவே, பல்வேறு தொழில்துறைகள் சாா்ந்த ஆா்வத்தையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துதலை முதன்மை நோக்கமாகக் கொண்டு பாதைகள் ஆயிரம் எனும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
இதன் தொடக்கமாக அக்.17-ஆம் தேதி கீழையூா் வட்டாரம் ஈசனூரில் உள்ள ஆரிஃபா பொறியியல் கல்லூரியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்வு நடைபெறஉள்ளது. இதில், மாணவா்களுடன் பெற்றோா்களும் பங்கேற்பதன் மூலம் தங்கள் குழந்தைகளின் லட்சியங்களுக்கு ஆதரவு நிலையை பெற்றோா்கள் பெறுவாா்கள். இதில் பங்கேற்க பதிவு செய்த முதல் 100 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். எனவே, பெற்றோா்களும் இச்செய்தியை அறிந்து தங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடி பள்ளித் தலைமையாசிரியரிடம் பெயரை பதிவு செய்ய ஊக்குவிக்கு வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...