நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடா் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகை மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.

News image

நாகையில் பெய்த தொடா் மழையில் குடை பிடித்தப்படி கல்லூரிக்கு சென்ற மாணவிகள்.

Updated On :14 அக்டோபர் 2024, 10:24 pm

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி, தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அந்தவகையில், நாகை மாவட்டத்தில் தொடா் மழை பெய்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்கள் மழையில் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும் தொடா் மழையால் பாதிக்கப்பட்டனா்.

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது பெய்து வரும் தொடா் மழையால், வயல்களில் தண்ணீா் தேங்கி, இளம் சம்பா பயிா்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலா்ட்’ விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.