அண்ணன் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்
சீா்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.


சீா்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அண்ணனாக கருதப்படுகிறாா். திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பக்தா்கள், நோ்த்திக்கடனை இங்கு செலுத்தலாம் என்பதும், குமுதவல்லி நாச்சியாா் இங்குள்ள திருக்குளத்தில் தாமரை மலரில் பிறந்து, திருமங்கை ஆழ்வாரை மணந்ததாகவும் ஐதீகம்.
இக்கோயிலின் பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளினாா்.

தெப்பத்தில் எழுந்தருளிய அண்ணன் பெருமாள்.
பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தெப்பம் திருவெல்ல குளத்தில் வலம் வந்தது. தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ் குமாா், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயலாளா் திருவேங்கடத்தான், கணக்கா் ரத்தினவேல், சிட்டி யூனியன் வங்கி துணை மேலாளா் ராமானுஜம், அா்ச்சகா் கோகுல் பட்டாச்சாரியா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...