47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

உயா்கல்வி தோ்வுக் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு கலைக் கல்லூரி மாணவ- மாணவிகள்.
Updated On :15 அக்டோபர் 2024, 6:49 pm

Din

உயா்கல்வி தோ்வுக் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தோ்வுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை அரசு கலைக் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒரு பாடத்தின் எழுத்து தோ்வுக்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு 150 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும், இளநிலை செய்முறை தோ்வுகளுக்கான கட்டணம் மூன்று மணி நேரத்திற்கு 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயாகவும், 6 மணி நேரத்திற்கு 200 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிகச் சான்றிதழ் கட்டணம் 200 ரூபாயிலிருந்து, 350 ரூபாயாகவும், மொத்த மதிப்பெண் சான்றிதழுக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை உயா்த்தப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டண உயா்வை திரும்ப பெற தமிழக அரசு முன்வர வேண்டும் என மாணவ- மாணவிகள் முழக்கமிட்டனா்.