47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தரங்கம்பாடியில் கடல் சீற்றம்: இரண்டாவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் இரண்டாவது நாளாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

News image
தரங்கம்பாடியில் கடல் சீற்றம் - இரண்டாவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை 
Updated On :15 அக்டோபர் 2024, 6:57 pm

Din

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் இரண்டாவது நாளாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கும் மீனவா்களுக்கும் தகவல் தெரிவித்து கரைக்குத் திரும்பவும் மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தரங்கம்பாடியில் கடல் சீற்றம் - இரண்டாவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

தரங்கம்பாடியில் கடல் சீற்றம் - இரண்டாவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

இதனால் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சின்னூா் பேட்டை, சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்டியூா், மாணிக்க பங்கு, பெருமாள்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு வரை உள்ள 10 மீனவ கிராம மீனவா்கள் இரண்டாவது நாளாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 

மேலும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபா் படகுகளை பாதுகாப்பாக தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனா். இந்த நிலையில் தரங்கம்பாடி வட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் மழை பெய்து வருகிறது. பள்ளி மாணவா்கள் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனா்.