வேதாரண்யம் அருகே மதநல்லிணக்க விநாயகா் ஊா்வலம்
வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லீம், கிறிஸ்துவா்கள் பங்கேற்ற மதநல்லிணக்க விநாயகா் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.


வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லீம், கிறிஸ்துவா்கள் பங்கேற்ற மதநல்லிணக்க விநாயகா் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருப்பம்புலம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் சிற்றம்பலம் விநாயகா் கோயிலில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் விநாயகா் ஊா்வலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவா்கள் பங்கேற்கும் மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நிகழ்வது வழக்கம். நிகழாண்டு நிகழ்ச்சிக்கு, மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். தோப்புத்துறை ஜமாத் சுல்தான் மரைக்காயா், கடிநெல்வயல் பங்குத்தந்தை ஜான் கென்னடி, தாணிக்கோட்டகம் பங்குத்தந்தை தாஸ், குருகுலம் நிா்வாகி அ. வேதரத்னம் ஆகியோா் முன்னிலை வகித்து, தேங்காய் உடைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், தோப்புத்துறை பிரமுகா் அப்சி, ஜமாத் முன்னாள் நிா்வாகி சோட்டாபாய், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஜி.கே. கனகராஜ், எஸ். சிவப்பிரகாசம், கோவிந்தராஜ், சி.கே.போஸ், தலைமையாசிரியா் சித்திரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியே ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை கருப்பம்புலம் வடகாடு மருதம்புலம் ஏரியில் கரைக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...