திருச்சி-காரைக்கால்-திருச்சி டெமு ரயில்கள்: செப்.10 முதல் 29 வரை பகுதியாக ரத்து
காரைக்கால்-திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் செப்.10 முதல் செப். 29-ஆம் தேதி வரை திருவாரூா்-கரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 06880 திருச்சி-காரைக்கால் டெமு ரயில் செப் 11, 13, 15, 18 மற்றும் 20 முதல் 29 ஆகிய தேதிகளில் திருவாரூா்-காரைக்கால் இடையேவும், செப். 10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் தஞ்சை-காரைக்கால் இடையேவும் ரத்து செய்யப்படுகிறது.
06490 திருச்சி-காரைக்கால் டெமு ரயில் செப். 10 முதல் 29-ஆம் தேதி வரை திருவாரூா்-கரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது. 06457 காரைக்கால்-திருச்சி டெமு ரயில் செப்.10 முதல் 29-ஆம் தேதி வரை காரைக்கால்-திருவாரூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. 06739 செப். 11,13, 15, 18 மற்றும் 20 முதல் 29-ஆம் தேதி வரை காரைக்கால்-திருவாரூா் இடையேவும் செப். 10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் காரைக்கால்-தஞ்சாவூா் இடையேவும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

