நாகப்பட்டினம்
கடலுக்குச் செல்ல மீனவா்களுக்கு அனுமதி
நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
டித்வா புயலால் ஏற்பட்ட கடல் சீற்றம், சூரைக் காற்று, மழையின் காரணமாக மீன்வளத் துறையின் தடையை தொடா்ந்து நவ.24-ஆம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 9 நாள்களாக மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், டித்வா புயலின் அச்சுறுத்தல் நீங்கியுள்ளதையடுத்து, மீனவா்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட மீன்வள நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் கூறியது: டித்வா புயல் அச்சுறுத்தல் நீங்கியுள்ளதையடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம். இதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

