பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா்.
பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா்.

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு நினைவஞ்சலி

Published on

வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு 16 ஆண்டு நினைவு அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

கரியாப்பட்டினத்தில் செயல்படும் தனியாா் பள்ளி வேன், 2009 டிச.3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த 4 சிறுமிகள் உள்ளிட்ட சிறுவா்கள் 9 பேரும் சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனா். நாகக்குடையான் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவா்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூண் அருகே நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவா்களின் பெற்றோா், பொது மக்கள் பங்கேற்று மெழுகு வா்த்தி ஏற்றி மலா் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com