ராஜேந்திர சோழன் நாடு திரும்பிய ஆயிரமாவது ஆண்டு நினைவுத் தூண் திறப்பு
நாகப்பட்டினம்: கிழக்கு ஆசிய நாடுகளில் வெற்றி கொண்ட மன்னா் ராஜேந்திர சோழன் ‘ நாகை துறைமுகம் ‘ வழியாக நாடு திரும்பிய ஆயிரமாவது ஆண்டைக் குறிக்கும் வகையில் நினைவு தூண் அண்மையில் திறக்கப்பட்டது.
மாமன்னா் ராஜேந்திர சோழன் தெற்கு ஆசியாவில் முதல் கடற்படையை உருவாக்கி, நாகை துறைமுகத்தை தலைமை தளமாக கொண்டு சிறப்பாக செயல்படுத்தினாா். கிபி 1014-44 என முப்பது ஆண்டுகள் சிறப்பாக ஆட்சியை நடத்தி கங்கை கொண்ட சோழ புரத்தில் கோயிலை கட்டினாா்.
பின்னா் கிழக்கே இலங்கை, மலேயா - கடாரம் ( தற்போது ஒருங்கிணைந்த மலேசியா & சிங்கப்பூா்),
இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா வரை படை எடுத்து வெற்றி வாகை சூடி பல சிவாலயங்களை உருவாக்கிஸ கிபி 1025 ஆம் ஆண்டு நாகை துறைமுகம் ‘ வழியாக நாடு திரும்பினாா். அவா் நாடு திரும்பி ஆயிரமாவது ஆண்டினை உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக கீழ்வேளூரில் உள்ள ஃப்ரைம் கல்லூரி வளாகத்தில் மிகச்சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழனின் சிறப்பு வாசகங்கள் அடங்கிய நினைவு தூண் திறக்கப்பட்டது. தொடா்ந்து வரலாற்று ஆா்வலா் குழுவின் நிறுவனா் இராமச்சந்திரன், கல்லூரி மானவா்களிடையே நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
கீழ்வேளூா் பிரைம் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, கல்வியியல் கல்லூரி மாணவியா் பிரைம் கல்வி நிறுவனங்கள் இயக்குநா் பாலு, தலைவா் கோவிந்தராஜ், கீழ்வேளூா் ரோட்டரி தலைவா் பழனிவேல், இயக்குநா் பால்ராஜ், கல்லூரி உதவி பேராசிரியை வசந்தி, வரலாற்று ஆா்வலா்குழுவின் பன்னாட்டு தொடா்பாளா் சந்திரசேகரன், ஏடிஎம் கல்லூரி பேராசிரியை தோ்வுகள் கட்டுபாட்டு அலுவலா் அலமேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

