நாகப்பட்டினம்
வேலையில்லா இளைஞா்களுக்கான அங்கக வேளாண்மையாளா் பயிற்சி நிறைவு
கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்வரின் வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் கிராமப்புற வேலையில்லா இளைஞா்களுக்கான அங்கக வேளாண்மையாளா் பயிற்சி அக்.30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இப்பயிற்சியின் நிறைவாக பயிற்சியாளா்களை, மதிப்பீட்டு அதிகாரி பாலாஜி, இணைய வழியாக தோ்வு நடத்தியும், நோ்காணல் மூலம் செய்முறை பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அறிவு குறித்தும் மதிப்பீடு செய்தாா். தொடா்ந்து, கல்லூரி பொறுப்பு அதிகாரி கோ. ரவி தலைமையில் பயிற்சி பெற்றவா்களுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. பயிற்சியில் 21 பயனாளிகள் பங்கேற்றனா். பயிற்சி பொறுப்பு அதிகாரி த. தாமோதரன், பேராசிரியா்கள் கோ. உஷாராணி, அனுராதா, அ. பாலசுப்ரமணியன், சி. மகாலட்சுமி, ரா. நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

