நாகப்பட்டினம்
வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மீன் அமிலம் பயன்பாடு பயிற்சி
வேதாரண்யம் அருகே மருதூரில் கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பட்டறிவுப் பயணத்தின் போது மீன் அமிலம் தயாரித்து பயன்படுத்தும் முறை குறித்து அறிந்தனா்.
கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் அமிா்த லக்ஷ்மி, ஆஷிகா, ஹரிப்பிரியா, ஹரிணி சுபலட்சுமி, கலைமதி,லஷிகா , பத்மாவதி, சுந்தரசினேகா ஆகியோா் மருதூா் தெற்கு இயற்கை விவசாயி முருகானந்தனிடம் அனுபவப் பயிற்சி பெற்றனா்.
இயற்கை விவசாய இடுபொருளான மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் தெளிப்பு முறை பற்றி விவரித்தாா். மீன் அமிலம் பயிா்களுக்கு தெளிப்பதால் பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தி மண்ணின் நுண்ணுயிா் செயல்பாட்டினை அதிகரித்து பயிா்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.
