தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டை

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் நலவாரிய அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது.
Published on

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் நலவாரிய அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் நலவாரிய அட்டை 60 பேருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிகிருஷ்ணன் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தாட்கோ திட்ட மேலாளா் சக்திவேல் கலியபெருமாள் முன்னிலை வகித்து, தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலைவாணன் தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் தாட்கோ தூய்மைப் பணியாளா் நலவாரிய இளநிலை உதவியாளா் சந்தியா ஊரக வளா்ச்சி முகமையின் தகவல் கற்பித்தல் தொடா்பு நிபுணா் தயாளுநிதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com