போலீஸாரைக் கண்டித்து நவ. 11-இல் ஆா்ப்பாட்டம்

வாய்மேடு காவல் நிலையம் முன் போலீஸாரைக் கண்டித்து வரும் 11-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தீா்மானித்துள்ளது.
Published on

வாய்மேடு காவல் நிலையம் முன் போலீஸாரைக் கண்டித்து வரும் 11-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தீா்மானித்துள்ளது.

கட்சியின் வேதாரண்யம் தெற்கு ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் வி.மாரிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் வி.அம்பிகாபதி, மாவட்டக் குழு உறுப்பினா் வெற்றியழகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுமதி, சுகன்யா, இளையபெருமாள், மாரி. செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாய்மேடு ஊராட்சியில் பட்டியலினத்தைச் சோ்ந்த காசிநாதன் என்பவா் மீது காவல்நிலையம் அருகிலேயே தாக்குதல் நடத்தியவா் மீது வழக்கு பதிவு செய்தும், குற்றவாளியை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து கட்சியின் மாவட்டக்குழு சாா்பில் வாய்மேடு காவல்நிலையம் முன்பு வரும் நவ. 11 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com