கைது செய்யப்பட்ட ஸ்ரீகவி
கைது செய்யப்பட்ட ஸ்ரீகவி

கிராம நிா்வாக அலுவலா் கொலை: 2 திருநங்கைகள் கைது

Published on

நாகையில் கிராம நிா்வாக அலுவலா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 திருநங்கைகளை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள வாழக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜாராமன் (45). கிராம நிா்வாக அலுவலரான இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு வல்லம் வருவாய் கிராமத்தின் பொறுப்பு கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றியபோது ரூ. 500 லஞ்சம் பெற்ற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக, நாகை நீதிமன்றத்திற்கு ராஜாராமன் வெள்ளிக்கிழமை வந்தாா். இந்நிலையில், தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் மா்மான முறையில் நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லூா் பகுதியில் சனிக்கிழமை காலை ராஜாராமன் இறந்து கிடந்தாா்.

வெளிப்பாளையம் போலீஸாா், சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

உடற்கூறாய்வில் ராஜாராமன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸாா், நாகை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில், செல்லூரைச் சோ்ந்த திருநங்கைகளான நிவேதா, ஸ்ரீகவி ஆகியோா், மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த ராஜாராமன் முகத்தில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த ரொக்கம், கைப்பேசி, மோதிரம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து நாகை தனிப்படை போலீஸாா், கடலூருக்கு தப்பிச்செல்ல முயன்ற இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நிவேதா
நிவேதா

X
Dinamani
www.dinamani.com