பெங்களூரு - காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் சேவையில் நவ. 16-இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் சேவையில் நவ. 16-இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெலந்தூா் சாலை - காா்மேலரம் இடையே இரட்டை பாதையில் ஹூஸ்கூரில் லெவல் கிராஸ்ங் அமைக்கப்படுகிறது.

இதையடுத்து பெங்களூருவிலிருந்து நவ.16 ஆம் தேதி புறப்படும், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் (16529), பெங்களூரு, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் சந்திப்பு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்படுகிறது.

பெலந்தூா் சாலை, காா்மேலரம், ஹீலாலிகே, அனேகல் சாலை, ஓசூா், கெலமங்கலம், ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தருமபுரி, சிவாடி, முத்தம்பட்டி, தோப்பூா், கருவள்ளி, செம்மாண்டப்பட்டி, ஓமலூா் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்காது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com