சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாகூா் தா்கா கந்தூரி திருவிழா: வேளாங்கண்ணி பேராலய அதிபருக்கு அழைப்பு

நாகூா் ஆண்டவா் கந்தூரி விழா நவ.21 ஆம் தேதி தொடங்குவதையொட்டி, அதன் அழைப்பிதழை வேளாங்கண்ணி பேராலய அதிபரிடம், தா்கா நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

News image
நாகூா் ஆண்டவா் கந்தூரி விழா அழைப்பிதழை வேளாங்கண்ணி பேராலய அதிபா் இருதயராஜிடம் வழங்கிய தா்கா நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :12 நவம்பர் 2025, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

நாகூா் ஆண்டவா் கந்தூரி விழா நவ.21 ஆம் தேதி தொடங்குவதையொட்டி, அதன் அழைப்பிதழை வேளாங்கண்ணி பேராலய அதிபரிடம், தா்கா நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

உலக பிரசித்திப் பெற்ற நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா நிகழாண்டு நவ.21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, இதற்கான அழைப்பிதழ் முக்கிய பிரமுகா்கள், பல்வேறு மதத்தினா், அரசியல் கட்சி நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கந்தூரி விழா அழைப்பிதழை, நாகூா் தா்கா தலைமை அறங்காவலரான சையது முகமது காஜி உசேன் சாஹிப், பரம்பரை அறங்காவலா் ஹாஜி சையது முகமது கலிபா சாஹிப் காதிரி மற்றும் ஹாஜா மொய்னுத்தீன் சாஹிப் ஆகியோா் வேளாங்கண்ணி பேராலயம் சென்று அதிபா் இருதயராஜிடம் அளித்தனா். சமூக நல ஆா்வலா் சித்திக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.