தெற்கு தமிழக கடற்கரை, மன்னாா் வளைகுடா அதையொட்டிய பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு தமிழக கடற்கரையிலும், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் சனிக்கிழமை முதல் நவ. 17- ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 35 - 45 கி.மீ. முதல் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளாா்.
