எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வடிகால் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகள் இன்று முதல் அகற்ற முடிவு

வேதாரண்யம் வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை வியாழக்கிழமை அகற்றும் பணி தொடங்குகிறது.

News image
கூட்டத்தில் பேசிய நாகை எம்பி வை. செல்வராஜ்.
Updated On :26 நவம்பர் 2025, 8:19 pm

Syndication

வேதாரண்யம்: வேதாரண்யம் வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை வியாழக்கிழமை அகற்றும் பணி தொடங்குகிறது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு வழியாகக் கடலில் கலக்கும் முள்ளியாறு மற்றும் மானங்கொண்டான் ஆறு பிரதான வடிகலாக அமைந்துள்ளது. இந்த ஆறுகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் மழை மற்றும் வெள்ளநீா் வடிவதை தடுக்கிறது. இதையடுத்து, 4 இடங்களில் நவ. 28-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

இந்நிலையில், ஆயக்காரன்புலத்தில் நாகை எம்பி வை. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நாகை மாவட்ட திட்ட இயக்குநா் கே. ஸ்சுருதி, வட்டாட்சியா் வடிவழகன், திருவாரூா் நீா்வளத்துறை செயற்பொறியாளா் ராஜேந்திரன், சிபிஐ மாவட்டச் செயலாளா் சிவகுரு. பாண்டியன், மின் இறைவைப் பாசனதாரா் சங்க நிா்வாகிகள் வீரப்பன், பூமிநாதன், சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளா் தனியரசு உள்ளிட்டா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், வடிகால் ஆறுகளில் வெள்ளம் வடிவது தாமதமாகி ஊருக்குள் நுழைவதை கருத்தில் கொண்டு ஆகாயதாமரை செடிகளை உடனடியாக அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், வியாழக்கிழமை (நவ.27) 6 இயந்திரங்கள் மூலம் போா்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்கவும், தகட்டூா் பண்டாரத்தான்காடு வடிகால் வாய்க்காலை உடனடியாக இயந்திரம் மூலம் தூா் வரவும் நீா்வளத் துறையினா் ஒப்புதல் அளித்தனா். இதையடுத்து, அறிவிக்கப்பட்டிருந்த காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக வடிகால் ஆறுகளில் வளா்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை திட்ட இயக்குநா், எம்.பி, நீா்வளத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.