ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

News image
நாகை துறைமுக அலுவலகத்தில் சனிக்கிழமை ஏற்றப்பட்ட 5- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
Updated On :29 நவம்பர் 2025, 4:30 pm

Syndication

டித்வா புயல் தீவிரம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ’டித்வா’ புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கன மழை நீடித்து வருகிறது. நாகை மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

டித்வா புயல் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தீவிரம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருந்த 4- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு, 5-ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.