சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:10 am IST

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் செல்வேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலத் தகவல் தொடா்பு செயலா் தினேஷ், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் பத்மநாபன் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வு காண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் நில அளவைத் துறையில் பணியாற்றிவரும் அலுவலா்களின் பணித் தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கவேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் லட்சுமி கீா்த்திவாசன், கோபிநாத், வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.