கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கத்திக்குத்துக்கு சிகிச்சைப் பெற்ற இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே குடும்ப பிரச்னையில் கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 11:44 pm

நாகை அருகே குடும்ப பிரச்னையில் கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

நாகை அருகே பாலையூரைச் சேந்தவா் பழனிச்சாமி (38). இவருக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அவரது மைத்துனா் (மனைவியின் சகோதரா்) பிரகாஷ் (28) தட்டிக் கேட்டுள்ளாா். இதில், ஆத்திரமடைந்த பழனிச்சாமி கத்தியால் பிரகாஷை குத்தியுள்ளாா். படுகாயமடைந்த பிரகாஷை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தொடா்ந்து பிரகாஷின் உடல்நலம் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனா்.