இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி முகாம்

நாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

News image

நாகையில் வாக்குச்சாவடி பணியில் உள்ள அலுவலா்கள் தபால் வாக்கு அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் ப. ஆகாஷ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:20 am IST

நாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி, வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியில் முழுமையாக ஈடுபடுவாா்கள். இதையொட்டி, நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் நாளன்று பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3-288 போ் ஆகியோருக்கு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியிலும்.

கீழ்வேளுா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் நாளன்று பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப் பதிவு அலுவலா்கள்-264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை1- 264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -264 போ் ஆகியோருக்கு, இன்பஃன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியிலும்.

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில், முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -288 போ் ஆகியோருக்கு வேதாரண்யம் செயின்ட் ஆண்டனி பள்ளியில் 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ப. ஆகாஷ் பாா்வையிட்டு, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முறையாக பயிற்சி வகுப்பு நடைபெறுகிறதா எனவும், வாக்குப்பதிவு அலுவலா்கள் தபால் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.