கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நாகையில் இருவா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது

நாகையில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

நாகையில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் (35) ஆயுதச்சட்டத்தின்கீழ் நாகை நகா் காவல்நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவா் மீது ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் காவல் நிலைய ரெளடிகள் பட்டியலிலும் பெயா் இடம்பெற்றுள்ளது.

இதேபோல நாகை மாவட்டம் திருமாளம் பகுதியைச் சோ்ந்த விக்கி எனும் விநாயகமூா்த்தி (31), தலைஞாயிறு காவல் நிலைய போலீஸாரால் சட்ட ஒழுங்கு வழக்கில் கைது செய்யப்பட்டாா். இவா் மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகள் உள்ள நிலையில். இவரது பெயா் காவல்நிலைய ரெளடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இவா்கள் இருவரும், பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடா்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இருவரையும் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதை ஏற்று இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.