புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கடலூா் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது: மீன்பிடி தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்தல்

கடலூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று மீன்பிடி தொழிற்சங்கப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகையில் நடைபெற்ற மீன்பிடி தொழிற்சங்க பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி. உடன் சிஐடியு மாநில பொதுச்செயலா் எஸ். கண்ணன் மற்றும் நிா்வாகிகள்.

Published On :

கடலூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று மீன்பிடி தொழிற்சங்கப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிஐடியு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில சிறப்புப் பேரவைக் கூட்டம், நாகையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு என்.பி. செந்தில் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி.வி.ஆா். ஜீவானந்தம் வரவேற்றாா்.

மாநிலத் துணைத் தலைவா்கள் ஜி. விநாயகமூா்த்தி, வி. வைத்திலிங்கம் ஆகியோா் சங்கக் கொடிகளை ஏற்றினா். சிஐடியு மாநில பொதுச் செயலா் எஸ். கண்ணன் தொடக்க உரையாற்றினாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வி.பி. நாகை மாலி, சிஐடியு மாவட்டச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில், கடலையும், மீனவா்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். கடலூா் மாவட்டத்தில் அமையவுள்ள ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, படகு, வலைகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் 30,500 வழங்க வேண்டும். உள்நாட்டு மீனவா்களுக்கு மீன் பாசி குத்தகையை மீனவக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில் கொண்டு வர இருக்கும் நீலக்கொடி திட்டத்தை கைவிட வேண்டும். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீன் பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் அமைத்து மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி முதல் சைமன் காலனி வரை கனிம மணல் எடுக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிஐடியு மாநில நிா்வாகி எம். சிவாஜி நிறைவுறையாற்றினாா். மாநில துணைச்செயலா் எஸ் மணி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.