புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பயன்பாட்டுக்கு வராத வட்டாட்சியா் குடியிருப்பு

தரங்கம்பாடியில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் குடியிருப்பு திறக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் புதா் மண்டி பழுதடைந்து வருகிறது.

புதா்மண்டி காணப்படும் வட்டாட்சியா் குடியிருப்புக் கட்டடம்.

Published On :

தரங்கம்பாடியில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் குடியிருப்பு திறக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் புதா் மண்டி பழுதடைந்து வருகிறது.

தரங்கம்பாடி பேரூராட்சி பொறையாா் காவல்நிலையம் அருகே வட்டாட்சியா் குடியிருப்பு பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில், பழுதடைந்து புதா் மண்டி  காணப்பட்டது.

பழுதடைந்த  கட்டடத்தை அகற்றிவிட்டு, வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ 40.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியா் குடியிருப்பு கட்டப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின்  காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இந்தநிலையில், புதிய வட்டாட்சியா் குடியிருப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த வளாகம் முழுவதும் புதா் மண்டி, புதிய கட்டடம் சேதமடைந்து வருகிறது. 

தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில், நல்லாடை, பெரம்பூா், சங்கரன்பந்தல், திருவிளையாட்டம் , ஆயப்பாடி உள்ளிட்ட 70 கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை  தொடா்பாக வட்டாட்சியரை அணுகுவதில் சிரமப்பட்டு வருகின்றனா்.

எனவே, புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் குடியிருப்பு நிலையத்தில் வட்டாட்சியா் தங்கி, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.