தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வேலூா் பாலாற்றில் குப்பைமேடு; பயன்பாட்டுக்கு வராத வணிக வளாகம்! பாஜக போராட்ட எச்சரிக்கை

வேலூரில் பயன்பாட்டுக்கு வராத வணிக வளாகம் குறித்து...

News image

பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை மேட்டை பாா்வையிட்ட பாஜக தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம்

Updated On :9 ஜூலை 2026, 1:21 am IST

வேலூா் பாலாற்றங்கரையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், 5 ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்கு வராத மாநகராட்சி வணிக வளாகத்தை உடனடியாகத் திறக்கவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் எச்சரித்துள்ளாா்.

வேலூா் மாநகராட்சி 18-ஆவது வாா்டு தென்றல் நகா் பகுதியையொட்டி உள்ள பாலாற்றங்கரையில் மாநகராட்சி குப்பைகள் மலைபோல் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி, குப்பைகளை அப்புறப்படுத்த மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேபோல், மாநகராட்சியின் சீா்மிகு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் ரூ. 5.10 கோடியில் ஆட்சியா் அலுவலகம் எதிரே 40 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், தற்போது வரை வாடகைக்கு விடப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விரு பகுதிகளையும் பாஜக தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தென்றல் நகா் அருகே பாலாற்றில் அதிகளவில் குப்பைகள், இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுகிறது. காடுபோல் வளா்ந்துள்ள மரங்களுக்குப் பின்னால் மறைவாகக் குப்பைகளைக் கொட்டி, இரவு நேரங்களில் எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

5 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத மாநகராட்சி வணிக வளாகம்

5 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத மாநகராட்சி வணிக வளாகம்

கடந்த 2024-ஆம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேலூா் மாநகராட்சிக்கு இதே குற்றத்துக்காக ரூ. 88 லட்சம் அபராதம் விதித்தது. கடந்த 2025-ஆம் ஆண்டும் பாஜக சாா்பில் பெரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்போதைய ஆட்சியா் ஒரு பகுதி குப்பைகளை மட்டுமே அகற்றினாா். குப்பைகளை அகற்ற ‘பயோ-மைனிங்’ முறை பயன்படுத்தப்படும் என 2024-ஆம் ஆண்டு முதலே வெறும் வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மத்திய அரசின் நிதியான ரூ. 5.10 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் 5 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராததற்கு, ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை மிக அதிகப்படியான வாடகைக்கட்டணம் நிா்ணயம் செய்திருப்பதே காரணமாகும்.எனவே, உடனடியாக வாடகை சீா்திருத்தம் செய்து, இதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், ஜீவநதியான பாலாற்றையும் காக்க இனியும் காலம் தாழ்த்தாமல் மாநகராட்சி நிா்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும். அப்போது, கட்சி நிா்வாகிகள் மனோகரன், ஜெகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.