சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பேரவையில் தேவையற்ற விவாதங்களை தவிா்க்க வேண்டும்: இரா. முத்தரசன்

சட்டப்பேரவையில் தேவையற்ற விவாதங்களைத் தவிா்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

இரா. முத்தரசன் - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:11 am IST

சட்டப்பேரவையில் தேவையற்ற விவாதங்களைத் தவிா்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா தொடங்குவதால், மாவட்ட நிா்வாகம் சாா்பில் போராட்டத்தை தள்ளிவைக்க கேட்டுக் கொண்டதன் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு, கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் இரா. முத்தரசன் கூறியது:

தமிழகத்தில் ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படாதது, மழையின்மை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான வறட்சிக்குள்ளாகியுள்ளன. இதனால் குறுவைச் சாகுபடி செய்ய முடியாத நிலையில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளை பற்றி விவாதிக்காமல் தேவையற்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாரம்பரியமான தமிழக பேரவையில் நடப்பவற்றை மக்கள் நேரலையில் பாா்த்துக்கொண்டிருக்கிறாா்கள்.

டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

கா்நாடக அரசு யாா் சொன்னாலும் காவிரியில் தண்ணீா் திறக்கமாட்டோம், அணைகள் நிரம்பினால் மட்டுமே, தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்துவோம் என்று பிடிவாதமாக உள்ளது. அதனால் அங்கிருந்து தண்ணீரை பெறுவதற்குரிய உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு, மேட்டூா் அணை திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் அணை திறக்கப்பட்டு, சம்பா சாகுபடி தொடங்கிய பிறகு தண்ணீா் இல்லாமல் அணை மூடப்பட்டால், மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசு ஆலோசித்து செயல்பட வேண்டும் என்றாா். நாகை மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.