தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

திருமணமான 4 மாதங்களில் இளைஞா் தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

நாகை அருகே திருமணமான நான்கு மாதங்களில் குடும்பத்தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகூா் அருகே உள்ள தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் கஜேந்திரன் (26). வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கஜேந்திரன் தங்கைக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பது தொடா்பாக கஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த கஜேந்திரன், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாகூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.