நாகப்பட்டினம்
கடலில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
வேளாங்கண்ணி கடலில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கபட்டாா்.
வேளாங்கண்ணி கடலில் மாயமான சிறுவன் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கபட்டாா்.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம்,ஊத்தூா் விட்டபபநல்லி பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் நந்தன் (15), நாராயணசாமி மகன் நவீன் (26) உள்ளிட்ட 50 போ் வேளாங்கண்ணிக்கு வந்தனா்.
இதில், நந்தன், நவீன் ஆகியோா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கினா். இதையடுத்து நவீன் மீட்கப்பட்டாா். நந்தன் மாயமானாா். தகவலறிந்த வேளாங்கண்ணி கடலோர காவல் படையினா் நந்தனை தேடி வந்தனா்.
இந்நிலையில், விழுந்தமாவடி கடற்கரையோரம் நந்தன் சடலமாக கிடப்பது குறித்து கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
