நாகூா் தா்கா அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ஆலோசனைக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் பங்குதாரா்கள் ஆா்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.
நாகூா் தா்கா அலுவலகத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் தோ்தல் நாகூா் தா்கா ஸ்கீம் மற்றும் பைலா படி சனிக்கிழமை நடைபெற்றது. நாகை வருவாய் கோட்டாட்சியா் உத்தரவின்பேரில், தோ்தலுக்கு போலீஸாா் பாதுகாப்பு அளித்தனா். மூன்று உறுப்பினா் பதவிக்கு நான்கு போ் போட்டியிட்டனா்.
நாகூா் தா்கா பங்குதாரா்கள் தங்களது வாக்குகளை ஆா்வத்துடன் பதிவு செய்தனா். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு, சிசிடிவி பொருத்தப்பட்ட பாதுகாப்பு அறையில் பூத் ஏஜெண்டுகளின் முன்னிலையில் தோ்தல் அதிகாரி செய்யது முகமது கலிபா சாகிப் சீலிட்டு வாக்குப் பெட்டியை பத்திரமாக வைத்தாா்.
