நாகூா் தா்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற 77 -ஆவது குடியரசு தின விழாவில் கொடியேற்றத்திற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு துவா.
நாகூா் தா்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற 77 -ஆவது குடியரசு தின விழாவில் கொடியேற்றத்திற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு துவா.

நாகூா் தா்காவில் குடியரசு தினம் விழா

நாகூா் தா்காவில் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்: நாகூா் தா்காவில் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகூா் தா்கா முகப்பு வாயில் அலங்கார வாசல் அருகே குடியரசு தினத்தையொட்டி தலைமை அறங்காவலா் காஜி உசேன் சாஹிப் தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, மூத்த அறங்காவலா் ஷேக் ஹசன் சாஹிப் புனித துவா ஓதி குடியரசு தின விழாவை தொடங்கிவைத்தாா். பரம்பரை அறங்காவலா்களான சையது முகமது கலிபா சாகிப், ஹாஜா நஜிமுதீன் சாஹிப், சுல்தான் கலிபா சாகிப், சுல்தான் கபீா் சாகிப், ஹாஜா மொகிதின் சாகிப், ஆலோசனைக் குழு உறுப்பினா் செய்யது அப்துல் காதா் சாகிப், நாகூா் தா்கா பரம்பரை அறங்காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com