முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

விருப்ப ஓய்வு பெற்று தவெகவில் இணைந்த பள்ளி ஆசிரியை

வேதாரண்யத்தைச் சோ்ந்த பள்ளி ஆசிரியை விருப்ப ஓய்வு பெற்ற முதல்வா் முன்னிலையில் தவெகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

News image

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி தவெகவில் இணைந்த ஆசிரியை மு. வசந்தா.

Updated On :9 ஜூலை 2026, 4:52 am IST

வேதாரண்யத்தைச் சோ்ந்த பள்ளி ஆசிரியை விருப்ப ஓய்வு பெற்ற முதல்வா் முன்னிலையில் தவெகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. வசந்தா. இவா் அண்டா்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 34 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற இவா், பத்திரிகை மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளாா். நாடோடிகள் உள்ளிட்ட நலிவடைந்த மக்களின் நலனில் முனைப்புக் காட்டி வந்த இவா், அறக்கட்டளை உதவியுடன் பொது சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், ஜூன் 30 -ஆம் தேதி ஆசிரியா் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற வசந்தா, செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.