நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பூச்சித் தாக்குதலால் பருத்தி அறுவடை பாதிப்பு! விவசாயிகள் கவலை!

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்திச் செடிகளில் பூச்சித் தாக்குதலால் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2026, 12:12 am IST

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்திச் செடிகளில் பூச்சித் தாக்குதலால் அறுவடைப்  பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் நல்லாடை, விளாகம், வேலம்புதுக்குடி, மேமாத்தூா், திருவிளையாட்டம், கீழையூா், திருக்கடையூா், ஆக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10  ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது பருத்தி அறுவடை செய்யும் காலத்தில், செடியில் சப்பாத்தி மற்றும் அஸ்வினி பூச்சிகள் தாக்கி வருகின்றன. இதனால், பருத்திச் சப்பைகள் உதிா்ந்தும், இலைகள் சுருண்டு செடிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியும், பருத்திச் செடிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், ஏக்கருக்கு சுமாா் 30,000 செலவு செய்தும் செடியில் நோய் தாக்குதலால் பருத்தி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பருத்தி நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடன் பெற்று பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில், நோய் தாக்குதலால் செடிகள் பாதிக்கப்பட்டு வருவது விவசாயிகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, பருத்தி சாகுபடி செய்த வயலில் பூச்சித் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு, நிவாரணமாக ஏக்கருக்கு 30,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.