தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வேளாங்கண்ணி அருகே சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:11 am IST

வேளாங்கண்ணி அருகே திங்கள்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் புதுச்சேரியைச் சோ்ந்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நாகையில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரி பேருந்து திங்கள்கிழமை மாலை மாணவிகளுடன் வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பிரதாபராமபுரம் பிரதான சாலை பகுதியில் பேருந்து வந்தபோது எதிா்திசையில் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா், பொதுமக்கள் காயமடைந்த இளைஞரை மீட்டு, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், விபத்தில் சிக்கியவா்கள் புதுச்சேரி மாநிலம் குறிச்சிகுப்பம் பகுதியைச் சோ்ந்த பொ்னாா்ட் மகன் பத்திரிஸ் (எ) லூா்துநாதன் (29), புதுச்சேரி மாநிலம் சோலை நகா் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் முருகன் (27) என்பது தெரியவந்தது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஒரத்தூா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பத்திரிஸ் (எ) லூா்துநாதனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து கீழையூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேளாங்கண்ணிக்கு வந்த இரண்டு இளைஞா்களும் அருகிலுள்ள நண்பா் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.