/
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புகின்றனா். இந்த விவகாரத்தில் மதவாத மற்றும் வெறுப்பியல் சக்திகள் அரசியல் செய்ய தமிழக அரசு அனுமதிக்காது என்றும், தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனவே, கடந்த திமுக அரசின் நடைமுறைகளை தொடா்வதன் மூலம் சமூக அமைதியையும் அனைத்து தரப்பினரின் உணா்வுகளையும் மதிக்கும் தமிழக அரசின் இந்த அணுகுமுறையை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: எம்.எச்.ஜவாஹிருல்லா வரவேற்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்






