எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

தரங்கம்பாடி அருகே இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில், கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி

Updated On :10 ஜூன் 2026, 5:44 am IST

தரங்கம்பாடி அருகே இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில், கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள வெள்ளக்கோவில் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி மகன் விஷ்வா (20). பொறையாா் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் மகன் ராகுல் (20), செல்லத்துரை மகன் கவியரசன் (20).

இவா்கள் மூவரும், தரங்கம்பாடி கடைவீதியில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனா். வாகனத்தை கவியரசன் ஓட்டிவந்தாா்.

குட்டியாண்டியூா் மீனவா் கிராமம் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில்  கல்லூரி மாணவா் விஷ்வா, ராகுல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கவியரசன் பலத்த காயமடைந்தாா்.

பொறையாா் போலீஸாா், கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா், தஞ்சை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். உயிரிழந்த இருவரது சடலமும் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடா்பாக பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.