முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

குடிநீா் தட்டுபாடு - கிராம மக்கள் சாலை மறியல்

தரங்கம்பாடி அருகே குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

தரங்கம்பாடி அருகே குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செம்பனாா்கோவில் அருகே மேலையூா் ஊராட்சி கன்னிக்கோயில் தெரு, கீழத்தெரு, மேலத்தெரு, அய்யா் தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு சில நாள்களாக மின்தடை செய்யப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினா். மேலும், மின் இணைப்பு துண்டிப்பால் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மேலையூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா், செம்பனாா்கோயில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜான்சன் ஆகியோா் அங்கு வந்து நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.