நாகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட கேல்கா் சுப்ரமணிய பாலசந்திரா (படம்) செவ்வாய்க்கிழமை மாலை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த சுஜித்குமாா் மாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் கண்காணிப்பாளராக கேல்கா் சுப்ரமணிய பாலசந்திரா நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கேல்கா் சுப்ரமணிய பாலசந்திரா பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பின்னா், மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
தொடா்ந்து அவா் கூறும்போது, மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி சிறப்பான காவல் பணிகளை மேற்கொள்ளவும், குற்றங்களைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.









