பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக அ. பவன்குமாா் ரெட்டி பொறுப்பேற்பு

கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அ.பவன்குமாா் ரெட்டி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அ.பவன்குமாா் ரெட்டி.

Updated On :23 மே 2026, 12:53 am IST

கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அ.பவன்குமாா் ரெட்டி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அ.பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

இதேபோல, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.காா்த்திகேயன், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், அ.பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.