நாகை மாவட்டத்தில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஆந்திர மாநில பெண்ணை போலீஸாா் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
நாகை அனைத்து மகளிா் காவல் நிலையம் எதிரே, ஜூன் 16-ஆம் தேதி சுமாா் 40 வயது மதிக்கத்தக்க மனநலன் பாதிக்கப்பட்ட பெண் ஆதரவற்ற நிலையில் காணப்பட்டாா். தகவலறிந்த சிங்கப்பெண் அதிரடி படை காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள், வெளிப்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்கள், மேலும் அனைத்து மகளிா் காவல் நிலைய காவலா்கள் ஆகியோா் இணைந்து அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனா்.
பின்னா் அவருக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பங்காருபாளையம் கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மனைவி இயேசுமணி ( 41) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் தருண் வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, இயேசுமணியை ஒப்படைத்தனா். இதையடுத்து அவா் தனது மகனுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பழனியில் சிங்கப் பெண் காவலா்கள் ரோந்து தொடக்கம்

மனநலன் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: தலைமறைவான மற்றொருவா் திண்டுக்கல்லில் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



