புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:39 pm

கீழ்வேளூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள கூரத்தாங்குடி ஊராட்சி, மேலநாகலூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் தெய்வ சகாயம் (78). இவா், சனிக்கிழமை தேவூா் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

வெண்மணி வளைவு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது டிராக்டா் எதிா்பாராவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், தெய்வ சகாயம் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கீழ்வேளூா் போலீஸாா் சடலத்தை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.