சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

நாகை அகத்தீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 2:04 am IST

நாகப்பட்டினம்: நாகை அகத்தீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, ஆனந்தவள்ளி உடனுறை அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் முன் உள்ள திருக்குளத்தில் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மலா் அலங்காரத்தில் அகத்தீஸ்வரா் மற்றும் ஆனந்தவள்ளி அம்பாள் எழுந்தருளினா். தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள இசைகளுடன் தெப்பம் புறப்பாடானது. திருக்குளத்தில் மூன்று முறை தெப்பம் சுற்றி வந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.