நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகேயுள்ள புலவனூா் ஸ்ரீ சின்மய துறைக்குடி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனிதநீா் கடங்கள் கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவரான காளியம்மன் மற்றும் விநாயகா், முருகப் பெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

