மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

News image

திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அசுபதி தீா்த்தவாரியில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

Updated On :21 மார்ச் 2026, 9:11 pm

திருக்கடையூா் அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் உள்ள ஆம்ல குஜாம்பிகா வாடா முலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்து திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் சுவாமிக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இங்கு தீா்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்த கிணற்றில் உள்ள நீா் காசிக்கு இணையான புனித நீராக கருதப்படுகிறது. ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் கோயில் கிணற்றில் புனித நீராட பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். 

இந்நிலையில், நிகழாண்டு சனிக்கிழமை அசுபதி நட்சத்திரத்தையொட்டி தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடா்ந்து ஆம்ல குஜாம்பிகா, பிரம்மபுரீஸ்வரா் சுவாமிகள் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அசுபதி தீா்த்த கிணற்றில் புனித நீராடி பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். தொடா்ந்து பக்தா்கள் புனித நீராடி சுவாமியை வழிபட்டனா்.