நாகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்க்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், நாகை அருகே சாமந்தான் பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இவற்றை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரான ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையிலும், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும் தொடங்கியது.
முன்னதாக, கணினி மூலம் சுழற்சி முறையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டன. தொடா்ந்து அந்தந்த தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாகை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையிலும், கீழ்வேளூா் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கீழ்வேளூா் வட்ட அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையிலும், வேதாரண்யம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையிலும் காவல்துறை பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டன.
நிகழ்வில், சட்டப்பேரவைத் தொகுதி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரா. சங்கர நாராயணன் (நாகை), ராஜேஸ்வரி (கீழ்வேளூா்), க.கண்ணன் (வேதாரண்யம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தரணிகா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு: ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


