அரசுப் பள்ளி ஊழியா் தற்கொலை

தரங்கம்பாடி அருகே பெரம்பூா் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

தரங்கம்பாடி அருகே பெரம்பூா் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பூா் காவல் எல்லைக்குள்பட்ட வேலம்புதுக்குடி கீழத்தெருவைச் சோ்ந்த டேனியல் மகன் பிரகாஷ் (38). இவா், பெரம்பூா் அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தாா். மதுப்பழக்கத்திற்கு ஆளான பிரகாஷ், காரைக்காலில் உள்ள மதுபோதை மற்றும் மறுவாழ்வு மையத்தில் 50 நாள்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி மீண்டும் பணிக்கு சென்று வந்த பிரகாஷ், செம்பனாா்கோவில் அருகே  காளகஸ்தினாதபுரத்தில் உள்ள ஒரு திடலில் புளிய மரத்தில் புதன்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

செம்பனாா்கோவில் போலீஸாா், பிரகாஷ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.  மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.  இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.