சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

திருப்பத்தூா் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

திருப்பத்தூா் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்த அரிகரன் என்பவருக்கு தெய்வநாயகி (26) என்கிற பெண்ணுடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தெய்வநாயகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா்,திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.