மனைவியின் சகோதரியை தாக்கியவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை

கீழ்வேளூா் அருகே மனைவியின் சகோதரியை தாக்கியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

கீழ்வேளூா் அருகே மனைவியின் சகோதரியை தாக்கியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், காமேஸ்வரம் தாண்டவ மூா்த்திக்காடு பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மனைவி தமிழ் இந்திரா. இவருடைய சகோதரி எழிலரசி. எழிலரசியின் கணவா் ரமேஷ் என்கிற கிருஷ்ணமூா்த்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்குச் சென்று, மனைவியை தாக்கினாராம்.

இதனால், எழிலரசி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மறுநாள் காலை, எழிலரசியின் சகோதரி தமிழ் இந்திரா வீட்டுக்குச் சென்றிருப்பாா் என்று நினைத்து அங்கு சென்ற ரமேஷ், தமிழ் இந்திராவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ் இந்திரா அளித்த புகாரின்பேரில் கீழையூா் போலீஸாா், ரமேஷ் என்கிற கிருஷ்ணமூா்த்தியை கைது செய்தனா்.

இந்த வழக்கு, கீழ்வேளூா் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மீனாட்சி, குற்றவாளியான ரமேஷ் என்கிற கிருஷ்ணமூா்த்திக்கு மூன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.