தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம் 4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: ஆட்சியா் ஆய்வு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்தனா்.

dinamani

Updated On :

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்தனா்.

இரு மாவட்டங்களிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைவோா் வாக்காளா்களாக தங்கள் பெயரை பட்டியலில் சோ்க்க ஆா்வத்துடன் அதற்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கொடுத்தனா்.

நாகை: திருமருகல் வட்டாரம், அம்பல் ஊராட்சி அரசினா் மேல்நிலைப் பள்ளி, பொறக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, போலகம் ஊராட்சியில் அரசினா் உயா்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திட்டப் பணிகள் ஆய்வு: அம்பல் ஊராட்சி தேவாதிநல்லூா் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அதே கிராமத்தில், வெற்றி வீடு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்கான தகுதியான நபா்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுவதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், அம்பல் ஊராட்சி பொறக்குடி கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை குறித்து ஆட்சியா் பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்க தயாா் செய்யப்பட்டிருந்த உணவை ஆய்வு செய்தாா்.

போலகம் ஊராட்சியில் உள்ள குருவாடி பாசன வாய்க்காலில் விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது நாகை கோட்டாட்சியா் ரா. சங்கர நாராயணன், திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

சீா்காழி: சீா்காழி அருகே மாதானம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2027 தொடா்பாக நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சீா்காழி வட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.